என் தமிழினமே!!!
தமிழகத்தில் ஆதிக்குடிகள் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் சூழ்நிலை வளர்ந்து வருகிறது. 'ஆதிக்குடிகளின் பாதுகாவலன்' என்று செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டணியை காப்பாற்றுவதிலேயே முனைப்பு காட்டுகிறது.
வேங்கைவயலில் கை குழைந்தை உட்பட பலரும் மலம் கலந்த குடிநீரை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வி.சி.க 'மதவாதத்திற்கு எதிரான கூட்டணி' என்று நாடகம் நடத்துகிறதே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கட்சியில் பல வழக்கறிஞர்கள் இருந்தும் ஒரு பொதுநல வழக்கு கூட தொடுக்கவில்லை. காரணம்: திராவிட கட்சியுடன் வைத்திருக்கும் அரசியல் கூட்டணி.
திராவிட அரசியல் ஆதிக்குடிகளை புறக்கணிக்கிறது என்று தெரிந்தும், அக்கட்சியுடனேயே கூட்டணியை முறிக்காமல், வெளிப்படையாக பிழைப்புவாதத்தில் வி.சி.க தொடர்ந்து வருகிறது. இத்தகைய வி.சி.க-வை தமிழர்கள் இதற்குமேலும் நம்பி ஆதரிப்பது அறிவுடைமையாகாது.
முழு வாதத்தையும் தரவுகளோடு பகுப்பாய்வு செய்ய விரும்புவோர் கீழே உள்ள காணொளியை பார்த்துக்கொள்ளவும்.